கேன்ஸ்(ஃபிரான்ஸ்): தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று(மே 18) நடந்த கேன்ஸ் பட விழாவில் வெளிநாட்டு திரைக்கலைஞர்கள் இந்தியாவில் படமெடுக்க உதவும் வகையில் இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
1.ஒலி-ஒளி துணைதயாரிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டம்,2. வெளிநாட்டுப் படங்களை படமெடுக்க ஊக்கத்தொகை திட்டம் ஆகிய திட்டங்கள் இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஆற்றலை வெளிப்படுத்தும்.
நேற்று நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தியாவின் பெவிலியனைத் தொடங்கி வைத்த அமைச்சர் தாக்கூர், “ இந்திய சினிமா என்பது மனித திறமைகள், வெற்றி, மற்றும் புதிய இந்தியாவிற்கான பாதைகள் பற்றிய கதைகள், இந்திய மக்களின் நம்பிக்கைகள், அனுபவங்கள், நெறிகள் , கனவுகள், சாதனைகளை பிரதிபலிப்பதில் தவறியதில்லை.
இந்திய கலாசாரத்தில் வேரூன்றிய இந்திய திரைப்பட தொழில் துறை தற்போது உலகளாவிய அங்கத்தைப் பெரும் அளவு வளர்ந்துள்ளது. நமது பழங்கால கதைகளை புதிய கதைசொல்லும் கலையில், தொழில்நுட்பம் கொண்டு இந்திய திரைப்படக் கலைஞர்கள் சொல்லி வருகிறார்கள்.
தற்போது பலம்வாய்ந்த அறிவுசார்ந்த ஆட்சி இருக்கிறது மற்றும் தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தளம் இதற்கு முன் இல்லாத பல வழிகளைத் தந்திருக்கிறது. இதற்கு அரசாங்கமும் உதவி செய்ய முன்வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயமாவது.., பயங்கரமாவது..!: திமுகவை வம்பிழுத்த மய்யத்தாரின் போஸ்டர்!