சென்னை: இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர். நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது முதல்முறையாக பாலிவுட் நாயகன் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' (Jawan) திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி சென்னையில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஷாருக்கான், இயக்குனர் அட்லி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை பிரியாமணி: இனிமேல் இங்குதான் இருப்பேன். இதுபோன்ற ஒரு மேடைக்கு வந்ததில் மகிழ்ச்சி. சீக்கிரம் பேசி விடுகிறேன். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் அட்லி. ஜூம் காலில் எனக்கு கதை சொன்னார். ரொம்ப மிகவும் பிடித்திருந்தது, அதனால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். விஜய் சேதுபதியின் பெரிய ரசிகை நான். உங்களுடன் அதிகம் நடிக்கவில்லை. நீங்கள் இருப்பதால் இப்படம் வேறு தளத்திற்கு சென்றுவிட்டது.
அனிருத் இசை பிடிக்கும். இவரது இசையில் நடனம் ஆட ஆசை இருந்தது. தற்போது இப்படத்தில் அது நிறைவேறிவிட்டது. (அனிருத் இசையில் அடுத்து லியோ வருகிறது என்று பேசும் போது ரசிகர்கள் ஆரவாரம்) பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடலுக்கு ஆடினேன். அதன்பின் இந்த படத்தில் உங்களுடன் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார்.
நடிகர் யோகி பாபு பேசும் போது, (தொகுப்பாளினி இந்தியில் பேச சொன்னபோது முதலில் எனது மொழியில் பேசிக்கிறேன் என்றார்) எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளித்த அட்லி, ஷாருக்கான் இருவருக்கும் நன்றி. என்னை பார்த்தவுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை பற்றி பேசினார். 13 வருடம் கழித்து இன்னமும் என்னை ஞாபகம் வைத்துள்ளதற்கு ஷாருக்கானுக்கு நன்றி.
தெறி படத்தில் எனது காட்சிகளை தூக்கி விட்டனர். அதன் பிறகு தொடர்ந்து படம் தருகிறேன் என்று அட்லி சொன்னார். அதை செய்தும் காட்டினார். தமிழில் எப்படி ஒரு ஆளுமையோ, அதே போல் இந்தியிலும் அட்லி ஆளுமைதான். ஹாலிவுட் செல்லுங்கள் அங்கேயும் ஆளுமை செய்வீர்கள். அட்லி ஹாலிவுட் போனால் அவருடன் நானும் சென்றுவிடுவேன் என தெரிவித்தார்.
அனிருத் பேசும் போது, ஷாருக்கான் விமான நிலையம் செல்ல வேண்டும், ஆகையால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன். எனது இசை கலைஞர்களுக்கு நன்றி. இதில் மொத்தம் 500 இசை கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விவேக் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். மற்ற டப்பிங் படங்கள் பாடல்கள் டப்பிங் பாட்டு போல இருக்கும்.
இதில் அப்படி இல்லை. இங்கிருந்து போனவர்கள் ரீமேக் படம் தான் செய்துள்ளனர். அட்லி சொந்த படம் எடுத்துள்ளார். நான் இசை அமைப்பாளர் ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. 10 வருடமாக தமிழ் சினிமாவில் இருந்த என்னை மும்பையில் நிற்க வைத்துள்ளார் நன்றி ப்ரோ. நீங்க போன இடம் உங்க காடு அட்லி, எல்லோரும் ஒதுங்கி தான் விளையாட வேண்டும். இந்த இடம் கிடைத்தது பெரிய பாக்கியம்.
முதல் இந்தி படமே ஷாருக்கான் உடன் ஆண்டவன் பாக்கியம். உங்களை ரொம்ப மிஸ் செய்வேன். லவ் யூ ஷாருக். லண்டனில் போய் எனக்கு சட்டை வாங்கி வந்தார். அவ்வளவு காதல் என்மீது வைத்துள்ளார். இது இந்தி படம் அல்ல; இந்திய படம். தமிழிலும் பயங்கரமாக அடிக்கப் போகிறது. உங்களது எனர்ஜிக்கு நன்றி, அனைவரையும் திரையரங்குகளில் பார்க்கலாம். (லியோ லியோ என்று ரசிகர்கள் கத்தினர். அது அடுத்த மேடை என்று அனிருத் தெரிவித்தார்).
இந்தி படம் பண்ண வேண்டும் என்ற திட்டம் இல்லை. அதற்கு அட்லி தான் காரணம். இனி அட்லி தனியாக போகாமல் எங்கள் எல்லோரையும் கூட்டிட்டு போய், அவர் ஜாலியாக சிரித்துக்கொண்டு இருப்பார். அதுதான் அவரது சிறப்பு. படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியாகும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Jawan audio launch: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய ஷாருக்கான்!