ETV Bharat / entertainment

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அனந்தம் தொடரின் டீசர்! - ஆனந்தம் நெப் தொடர்

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இணையத்தொடரான “அனந்தம்” எனும் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அனந்தம் தொடரின் டீசர்!

author img

By

Published : Apr 3, 2022, 8:11 PM IST

Updated : Jun 29, 2022, 9:38 AM IST

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடர் “அனந்தம்”. இது 1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும்.

ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை.

இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் தொடரில் இயக்குனர் ப்ரியா பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குனர் ப்ரியா. இத்தொடரின் டீசரை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சசிகுமாரின் ‘காரி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

Last Updated : Jun 29, 2022, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.