ETV Bharat / entertainment

இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை 'தி லாஸ்ட் பிலிம் ஷோ' - ஒரு பார்வை - இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை

சமேவிற்கு சினிமா மீது ஆர்வம் வந்தது என்பதை விட சினிமாவின் பிரமிப்பின் மீது ஆர்வம் வந்தது என்றே சொல்லலாம். அவனின் தேடல் மிக ஆழமானது, அவன் சினிமா எனும் கண்டுபிடிப்பின் ஆதிக்குச் செல்ல முயல்கிறான். அதாவது ஒளியைத் தேடி.

இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை ’தி லாஸ்ட் பிலிம் ஷோ’ - ஒரு பார்வை

author img

By

Published : Sep 22, 2022, 7:29 PM IST

சினிமா நம் வாழ்வில் எதுவாக உள்ளது..? இந்தக் கேள்வி நம்முள் என்றாவது எழுந்திருக்குமானால் நாம் ரசிகர் - கலைஞன் என இரு வேறு பரிணாமங்களின் இடைநிலையில் இருக்கிறோம் எனலாம். இதைப் படிக்கும் நீங்களும் எழுதும் நானும் சில நொடிகள் நமக்கு பரிச்சயமான ஆனால் நினைவில் சற்றே மங்கலாகிப் போன ஒரு உலகிற்கு பயணிக்கலாம்.

இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை ’தி லாஸ்ட் பிலிம் ஷோ’ - ஒரு பார்வை
இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை ’தி லாஸ்ட் பிலிம் ஷோ’ - ஒரு பார்வை

நாம் முதலில் கண்ட சினிமா, அது தந்த பிரமிப்பு, அது விதைத்தக் கேள்விகள், இப்படி நாம் முதலில் கண்ட சினிமா நமக்களித்த பேரனுபவங்கள் பல. இப்படி நான் கண்ட முதல் சினிமா அனுபவங்களை நினைத்துத் திளைக்க வைத்த திரைப்படம் தான் குஜராத்தி இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவாகி இந்தியாவின் சார்பாக ஆஸ்கார்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘தி லாஸ்ட் பிலிம் ஷோ’.

ஒரு ஒன்பது வயது சிறுவனின் செல்லுலாய்டு காதல் கதை தான் இந்தத் திரைப்படம். தன் முதல் சினிமாவைக் காணும் ’சமே’ இனி சினிமா தான் தன் தேடல் என முடிவு செய்வதாய் இந்தப் படம் தொடங்குகிறது. ஒரு நல்ல திரைப்படத்திற்கான அறிகுறி ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்தப்படத்தின் நோக்கத்தைக் கடத்துவது தான்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இயக்குநர் மார்டின் ஸ்கோர்சசி இயக்கத்தில் வெளியான ’குட் பெல்லாஸ்’ திரைப்படத்தை சொல்லலாம். அந்தப் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே அந்தப் படத்தின் மையக் கதாபாத்திரம் அந்தப் படத்தின் நோக்கத்தை ஒரே வசனத்தில் விளக்கிவிடும். அப்படி ஒரு அணுகுமுறையைத் தான் பான் நலின் இந்தப் படத்தில் கையாண்டதாக நான் கருதுகிறேன்.

இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரமான ’சமே’ -வைப் பற்றிக் காணலாம். சமே ஒரு புத்திசாலி, செய்முறைத்திறன் மிக்கவன் என்பதைப் படத்தின் முதல் ஷாட்டிலேயே விளக்கியிருப்பார் இயக்குநர் நலின். அவன் எதையும் பின்பற்றுபவன் அல்ல, தனக்கென தனித் தேடலைக் கொண்டவன், கலகக்காரன்.

தன் அப்பா சொன்னாலும் தன் தலைமுடியை வெட்டமாட்டான். அவனுக்குப் புகுத்தப்படும் பாரம்பரிய சிந்தனைகளைக் கண்டுகொள்ளமாட்டான். இவையே அவன் கலைஞனாக மாறும் பரிணாமத்தின் அறிகுறிகள். அவனை எந்தக் கட்டுபாடுகளுக்குள்ளும் கொண்டுவர இயலாது.

தன் தேடலை எதற்கும் சமரசம் செய்யமாட்டான். சமேவிற்கு சினிமா மீது ஆர்வம் வந்தது என்பதை விட அது அவனக்களித்த பிரம்மிப்பின் மீது ஆர்வம் வந்தது என்றே சொல்லலாம். அவனின் தேடல் மிக ஆழமானது, அவன் சினிமா எனும் கண்டுபிடிப்பின் ஆதிக்குச் செல்ல முயல்கிறான். அதாவது ஒளியைத் தேடி.

ஒரு சினிமா மேதைக்கான அனைத்து ஆற்றல்களும் சமேவிடம் இருக்கும். அவன் சினிமா எடுக்க வேண்டும் என நினைக்கவில்லை, அது தரும் ஆச்சரியத்தை தானும் நிகழ்த்தவேண்டுமென நினைக்கிறான். அதனால் தான் கண்ணாடி பாட்டில்களை லென்சாகப் பயன்படுத்துவது, அந்திமாலை ரயில் வெளிச்ச நிழல்களைத் திரையிட முயல்வது, தீப்பெட்டி படங்களை வைத்து கதை சொல்வது என சமேவின் எண்ணமெல்லாம் அந்த மேஜிக்கை தான் நிகழ்த்திவிட வேண்டும் என்பது தான்.

படத்தின் ஒருகட்டத்தில் அதை நிகழ்த்தவும் செய்வான் சமே. தன்னிடம் கிடைக்கும் எதையும் வைத்துக் கதை சொல்ல முயல்வான் சமே. அவனுக்கு அவனின் வறுமை நிலை குறித்தப் புகார்களோ, தற்பரிதாபங்களோ கிடையாது. ஏனெனில் அவன் ஒரு படைப்பாளி, அவனின் எண்ணங்கள் மிகவும் அதர்ந்தது.

படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இவருக்கும் சமேவிற்குமான உறவுமுறை நமக்கு இயக்குநர் ஜியுசெப்பி டோர்னேடோர் இயக்கத்தில் வெளியான கிளாசிக் திரைப்படமான ‘சினிமா பாரடிசோ’ -வை நியாபகப் படுத்துவதைத் தவிற்கமுடியவில்லை. எனினும், இதில் அந்த உறவுமுறை மிக புதுமையாகவே கையாளப்பட்டுள்ளது.

சமேவின் ருசியான வீட்டு உணவை லஞ்சமாக வாங்கி சமேவிற்கு சினிமாவை புரொஜக்டர் அறையில் காட்டுவது, சமேவிடம் ‘பொய் சொல்வது தான் சினிமா, கீழே உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் தான்’ எனக் கூறும் காட்சிகளெல்லாம் மிகவும் ரசிக்கும் படி அமைந்தது. ஒருவகையில் அவர் சமேவின் வருங்கால எதிரொலியாகவும் பார்க்கலாம். ஒருவேளை சமே தன் தேடலைத் தன் கல்வியைக் கருவியாகக் கொண்டு தேடாமல் இருந்தால் அவனின் நிலையும் அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் நிலை தான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

எப்போதும் கையில் குச்சிவைத்து தன் பிள்ளையிடம் தன் கோட்பாடுகளை மட்டும் சொல்லி வளர்க்கும் ஒரு சராசரி தந்தையாக் சமேவின் தந்தை கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரம் தன் வாழ்வில் பெரிதாகத் தோற்ற கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் பரிணாமம் கொஞ்சம் வழக்கமாகத் தென்பட்டாலும் ரசிக்கும் படியே அமைந்தது.

மறுபக்கம் விதவிதமாக கூட்டுக்கறி செய்து, சப்பாத்தியைத் தனி ஸ்டைலில் கட்டிக்கொடுக்கும் சமேவின் தாய் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திற்கு பெரிதாக வசனமே இருக்காது படம் முழுதும். ஒரு முக்கியமான காட்சியில் கூட எதுவும் பேசாது, தன் பாவனைகளிலேயே உணர்ச்சிகளைக் கடத்தும் . மேலும், படத்தின் ஓர் காட்சியில் சமேவின் தங்கையை முதுகில் சுமந்து ஓடும்போது அச்சு அசலாக குஜராத் கிராமப்புற பெண்களின் உடல்மொழியைக் காட்டியதெல்லாம் இயக்குநரின் மண்சார்ந்த நுணுக்கங்களைக் காட்டுகிறது.

அடுத்ததாக, இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் பாதிப்படைவதாகக் காட்டப்படும். எலெக்ட்ரிக் ரயில் அறிமுகப்படுத்தவிருப்பதால் சமேவின் தந்தையின் ஸ்டேஷன் டீக்கடைக்கு வேலை போகும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் தியேட்டர் ஆப்பரேட்டருக்கு வேலை போகும். அந்தகட்டத்தில் தான் தன் தேடலுக்கு கல்வியறிவு எத்தகைய கருவி என்பது சமேவிற்கு புரியும்.

அவன் ஆசைஆசையாய்க் கண்ட சினிமா ரீல்கள் அனைத்தும் ஓர் ஆலையில் கண்ணாடி வளையல்களாக ஆவதைக் கண்டு உடைந்துபோவான் சமே. அவன் கண்களுக்கு அவை அனைத்தும் குவித்துவைத்த ரீல் மலைபோல் தெரியும். அப்படியே அதில் விழுந்து புரள்வதைப் போல் சமே உணர்வதாய் இயக்குநர் காட்சி அமைத்திருப்பார்.

இந்த விஞ்ஞானப் புதுமைகளின் முன் தோற்றுப் போனவர்களின் குரூரத்தைக் கண்முன் சில நொடி அந்தக் காட்சி நிறுத்தியது. சில கணம், நாம் பொக்கிஷமாக கருதும் பொருட்களை உருத்தெரியாது குலைக்கிறதோ என்றும் தோன்றியது. இந்தப் படத்தை ஒருவகையில் இயக்குநர் பான் நலினின் கதையாகவும் பார்க்கலாம்.

தன்னுடைய தாய்நிலமான சவுராஷ்ட்ரா பகுதிகளின் வாழ்க்கை முறை, மண்வாசனை என அனைத்தையும் சரியாகப் பதிவு செய்ய முயன்றிருப்பது படத்தில் தெரியும். மேலும், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சரியாகக் கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தனர்.

காட்சியமைப்பு, திரைமொழி, படத்தொகுப்பு என அனைத்தும் கச்சிதம். படத்தின் முடிவில், நாமே அந்த கதை நடக்கும் ஊரில் நடந்து சென்று சுற்றித் திரிந்தது போல் வழியெல்லாம் நமக்கு பரிட்சயமாகிவிடுகிறது. படத்தின் இறுதிகட்டத்தில் சில விஷயங்கள் நாம் ஏற்கனவே பார்த்ததாக இருப்பினும், இறுதிக் காட்சியில் தன் தேடலின் பெரும்பயணத்திற்காக சமே ரயிலில் ஏறுவான்.

அந்த ரயிலில் கும்பலாக பெண்மணிகள் கண்ணாடி வளையல் அணிந்து அமர்ந்திருப்பார்கள். அவர்களின் கண்ணாடி வளையல்கள் சமேவின் கண்களுக்கு சத்யஜித் ரேயாக, சாருக் கானாக, குரு தத்தாக, ரஜினிகாந்தாக, ஸ்டான்லி குப்ரிக்காக, அண்டோனியோனியாகத் தெரிவதாய் படம் முடியும். அந்த ஏழை பெண்களுக்கு தெரியவில்லை, தாங்கள் அணிந்திருக்கும் வளையல்களின் மதிப்பு என்னவென்று..

இதையும் படிங்க: காட்சிக்கூராய்வு, ஓர் உன்னதமான துரோகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.