ETV Bharat / entertainment

நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் மோசடி... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

author img

By

Published : Nov 25, 2022, 3:23 PM IST

நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல், புகைப்படத்தை வணிக அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகர் அமிதாப் பச்சன் தரப்பில் விளம்பர உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரில் போலியாக லாட்டரி விற்பனை நடக்கின்றன. ஆன்லைன் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படம் மற்றும் குரல் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

அதன்காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆகவே, அனுமதியின்றி அமிதாப் பச்சனின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நவீன் சாவ்லா அமர்வில் விசாரணை செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி, மனு தாரரின் அங்கீகாரமும், பிரபலம் என்னும் அந்தஸ்தும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டுவதால் அவருக்கு அவப்பெயரும் உண்டாகிறது. ஆகவே, அமிதாப் பச்சன்/பச்சன்/பிக்பி/ஏபி ஆகிய பெயர்களையோ அவரது குரல், புகைப்படத்தையோ வணிக அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக யாரும் பயன்படுத்த வேண்டாம். இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தொலைபேசி எண்களையும், இணைய சேவையையும் முடக்க தொலைத்தொடர்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.