ETV Bharat / entertainment

காலா ஹீரோயின் நடிக்கும் ஆலகாலம்..! படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - alagalam first look poster

Alagalam movie: ஸ்ரீ ஜெய் புரோடக்சன் தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கி, நடிக்கும் ஆலகாலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஆலகாலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 5:51 PM IST

சென்னை: சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனை மற்றும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி ஸ்ரீ ஜெய் புரோடக்சன் தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கும் படம் ஆலகாலம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று (நவ. 18) வெளியிட்டுள்ளனர்.

கதை களம்: ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழியும் அவனை மீட்க அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா? என்பதே இப்படம் எனக் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். மேலும் பார்வையாளர்களிடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்ட முன்னனி சின்னத்திரை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஜெயகி தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை கே. சத்யராஜ் மற்றும் என். ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். மேலும், மூ. காசி விஸ்வநாதன் எடிட்டிங் மற்றும் தேவேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவின் மரியம் குரியன் தமிழ் திரைத்துறையின் குயின் ஆன கதை.. நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.