படங்களைத் தாண்டி எப்போதும் கார், பைக், ஹெலிகாப்டர், துப்பாக்கி, கேமரா என தனக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டு வருபவர், நடிகர் அஜித். அவர் தற்போது மேற்கொண்டுள்ள பைக் பயணத்தின் வரைபடத்தினை அவரது நண்பர் சுப்புராஜ் வெங்கட் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அஜித் குமார் தனது உலகம் சுற்றும் பயணத்தை 2021ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது பாரத தேசம் முழுவதும் சுற்றி வருகிறார். மீதமுள்ள மாநிலங்களை முடித்துவிட்டு வரும் 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளார். இதுவரை இந்தியாவில் சண்டிகர், மணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.
மேலும் அவர் செல்லவிருக்கும் இடங்கள் குறித்த வரைபடங்கள் வெளியிடப்படும்”, என்று தெரிவித்துள்ள அவர் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.
-
Updated Map for the ❤️ of #ak’s fans#AjithKumar #akmotorcyclediaries #worldtour pic.twitter.com/ixaDz3R1FL
— Suprej Venkat (@suprej) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Updated Map for the ❤️ of #ak’s fans#AjithKumar #akmotorcyclediaries #worldtour pic.twitter.com/ixaDz3R1FL
— Suprej Venkat (@suprej) September 15, 2022Updated Map for the ❤️ of #ak’s fans#AjithKumar #akmotorcyclediaries #worldtour pic.twitter.com/ixaDz3R1FL
— Suprej Venkat (@suprej) September 15, 2022
மேலும் அவ்வப்போது அவரின் பயணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: 100 நாடுகளில் வெளியாகிறது பாலிவுட் 'விக்ரம் வேதா'