ETV Bharat / entertainment

நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘வித்தைக்காரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்! - actor sathish

Vithaikkaaran First Single: நகைச்சுவை நடிகர்‌ சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் முதல் பாடலை (First Single) நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டனர்.

நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வித்தைக்காரன் பட முதல் பாடலை வெளியிட்டனர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 1:45 PM IST

சென்னை: நடிகர்‌ சதீஷ், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர். இவர் தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக களம் இறங்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, தற்போது இவர் மீண்டும் கதாநாயகனாக வித்தைக்காரன் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடலை, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டுள்ளனர்.

White Carpet Films சார்பில், K.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர். ஒரு கொள்ளையும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு மிருக தோஷமா… ’லியோ’ திரைப்பட ரிசல்ட் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.