ETV Bharat / entertainment

சூர்யாவைவிட்டு பிரிந்தாரா கார்த்தி? - தனிக் தனியாகவே ரசிகர் மன்றங்களை இயக்கி வருகிறார்கள் சூர்யா மற்றும் கார்த்தி

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ஒரு விஷயத்தில் பிரிந்து செயல்படத்தொடங்கியுள்ளனர். அது என்னவென்று பார்ப்போம்.

சூர்யா மற்றும் கார்த்தி பிரிந்தனர்.
சூர்யா மற்றும் கார்த்தி பிரிந்தனர்.
author img

By

Published : Apr 12, 2022, 5:20 PM IST

Updated : Apr 12, 2022, 5:26 PM IST

சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரின் ரசிகர் மன்றங்கள் நேற்றுவரை ஒன்றாகவே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்கள் மன்றங்களைப் பிரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு நடிகர்களின் தற்போதைய ரசிகர் மன்றங்களின் நிலை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, இருவரும் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் இருவருக்கும் பெரியளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

இந்நிலையில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனையும், கார்த்தியின் உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடத்தி வருவது போல, தற்போது ரசிகர் மன்றங்களையும் இருவரும் தனித்தனியாக பிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இருவரது படங்களின் வியாபாரத்தையும் பெருக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முன்வந்து உதவிய சூர்யா, கார்த்தி

Last Updated : Apr 12, 2022, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.