நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை இனியா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு "தூக்கு துரை" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அட்வெஞ்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். "தூக்குதுரை" திரைப்படம் PRE (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 19ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 என மூன்று விதமான காலகட்டங்களில் படத்தின் கதை நகர்வதாக படக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகிபாபு, நடிகை இனியா ஆகியோருடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா, வெற்றி பிரபு உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'துணிவு' வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய லைகா!