ETV Bharat / entertainment

குட்டி கதை மூலம் உதயநிதிக்கு குட்டு வைத்தாரா விஜய்.. லியோ வெற்றி விழாவில் நடந்தது என்ன? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Vijay Speech in leo success meet: லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜயின் பேச்சு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் மற்றும் உதயநிதி
நடிகர் விஜய் மற்றும் உதயநிதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 5:40 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூபாய் 540 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், இதன் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர்.

விஜய்யின் குட்டிக்கதைக்காக காத்திருந்த அவரது ரசிகர்கள், இப்படத்தின் வெற்றி விழாவால் உற்சாகமடைந்தனர். விழாவில் நடிகர் விஜய்யின் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் தென்பட்டது. இவ்விழாவில் நடிகர் விஜய், காக்கா, கழுகு கதைக்கு ஒரு குட்டி கதை சொன்னார். நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் தென்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கும், தனது தெளிவான பேச்சின்‌ மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜயின் குட்டி ஸ்டோரி: தனது மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி கட்டமைக்க போகிறார் என்பதும் அவரது பேச்சில் அழுத்தமாக தெரிந்தது. இது ஒருபுறம் இருக்க உதயநிதி குறித்து அவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. விழாவில் உதயநிதி குறித்து அவர் பேசியதாவது, "வீட்டுல ஒரு குட்டிப் பையன் தன் அப்பாவோட சட்டையை எடுத்துப் போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான்.

அப்பாவோட சேர்ல ஏறி உட்காந்துக்குவான். அந்த சட்டை அவனுக்கு செட்டே ஆகாது தொள தொளன்னு இருக்கும். வாட்ச் கையிலேயே நிக்காது. அந்த சேர்ல உக்காரலாமா? வேணாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அது அவன்‌ அப்பா சட்டை. அப்பா மாதிரி ஆக வேண்டும் என்பது கனவு. இதுல என்ன தவறு இருக்கு. நீ பெருசா கனவு காண் நண்பா” என்று கூறியிருந்தார்.

லியோ பட பிரச்சினைக்கு உதயநிதி காரணமா?: நடிகர் விஜய்யின் பேச்சு, உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக சாடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.‌ லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்தது, படம் வெளியீட்டின் போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் போன்றவைகளுக்கு பின்னணியில் உதயநிதிதான் இருப்பார் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் தான் விஜய் அப்படி பேசியிருந்தார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நாகரிகமான முறையில் தான் பேசியுள்ளார் என்றும் அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். தகுதி இருக்கா? என்று கேட்டு விட்டு பின்னர் அதில் என்ன தவறு என்று விஜய் பேசியிருப்பார். இதன் மூலம் அவரது ரசிகர்களை விஜய் திருப்திபடுத்தி விட்டதாக கருத்து நிலவுகிறது. மேலும் ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட நடிகர்களை பற்றி பேசியது எதிர்கால அரசியலுக்கு விஜய் போடும் கணக்கு என்றும் கருத்து நிலவுகிறது.

என்ன தான் சினிமாவில் தனக்கு போட்டி நடிகர்களாக ரஜினி மற்றும் அஜித் இருந்தாலும் அரசியல் என்று வந்துவிட்டால் அவர்களது ரசிகர்களின் ஓட்டும் விஜய்க்கு தேவையல்லவா அதற்கு தான் இப்படி பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் நேற்றைய பேச்சு, தேர்ந்த அரசியல்வாதியின் பேச்சு போல அத்தனை சிறப்பாக இருந்தது என்பதே உண்மை.

இதையும் படிங்க: ஒரு காட்டுல மான், காக்கா, கழுகு இருந்துச்சாம்… லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.