ETV Bharat / entertainment

பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய்! - விஜய்

நடிகர் விஜய்யின் இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் திரைப்பட வாழ்க்கை குறித்த தொகுப்பை காணலாம்.

பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜய்!

author img

By

Published : Jun 22, 2022, 6:37 AM IST

1992ல் தனது தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகிறார் விஜய். அரும்பு மீசை, விடலை பருவம், நெருப்பு கண்கள். அப்போதே ரசிகர்கள் இவரிடம் ஏதோ ஒன்று இருப்பதை அறிந்து கொண்டனர். தொடர்ந்து அப்பா இயக்கத்தில் சில படங்களில் நடித்தார்.

திருப்புமுனை : படம் பார்ப்பவர்களுக்கு இவர் யார் என்று தெரிந்து விட்டது. ஆனால் இவரால் என்ன செய்ய முடியும் என்று தெரிய வேண்டாமா ?. 1996ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக என்ற படம் விஜயின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை எஸ்.ஏ.சி.யின் மகனாக அறியப்பட்டவர் இப்படத்திற்கு பிறகு விஜய்யாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நுழைந்தார்.

அதனை தொடர்ந்து வந்த காதலுக்கு மரியாதை படம் விஜயின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. விஜய்க்கு என ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. பெரும் பாய்ச்சலுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இமாலய வெற்றி :தனது திரை பயணத்தின் ஆரம்ப காலங்களிலேயே நெகடிவ் வேடத்தில் நடித்து அசத்தினார். காதலுக்காக நண்பனையே கொலை செய்யத் துணியும் நபராக நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் மீண்டும் ஒரு இமாலய வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. 2000ம் ஆண்டில் வெளியான குஷி, பிரியமானவளே, பத்ரி, பிரண்ட்ஸ் ஆகிய படங்கள் வணிகரீதியான வெற்றி பெற்றது.

எம்ஜிஆர், ரஜினிக்கு அடுத்து குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப்படும் நடிகராக உருவெடுக்கத் தொடங்கினார். பொதுவாக அதிகம் சிரித்து பேசாதவர் கேமராவுக்கு முன் வந்துவிட்டால் நகைச்சுவை நடிகர்களையே மிஞ்சும் அளவுக்கு காமெடி சென்ஸ் உள்ளவர்.

மனம் கவர்ந்த நாயகன் : உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள் கொண்ட படங்களின் மூலம் கிராமங்கள் வரையிலும் சென்று சேர்ந்த விஜய் காதல் படங்களின் மூலம் கிராமத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகனாக உருவெடுத்தார். ஆனால் காதல் படங்கள் மட்டுமே ஒரு தலைவனை உருவாக்கிவிடாது என்பதை உணர்ந்த விஜய், மெல்ல மெல்ல ஆக்சன் அவதாரம் எடுத்தார்‌.

இளையதளபதி : அதற்கு பிள்ளையார் சுழி போட்டது ரமணா இயக்கத்தில் வெளியான திருமலை. ஏற்கனவே பகவதி என்ற படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்திருந்தாலும் திருமலைதான் விஜயக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே‌ ஆக்சன் படங்களின் புதிய அத்தியாயமாக இருந்தது. அதன்பிறகு கில்லி, மதுரா, திருப்பாச்சி என ஹிட் கொடுத்து இளைய‌ தளபதியாக உயர்ந்தார்.

அசத்தல் நடனம் : இயல்பிலேயே நடனம் ஆடுவதில் கில்லியான விஜய் அதிலும் புதுமைகளை புகுத்தி தனது தனித்திறமையான நடனத்தில் இன்றுவரை தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி க்யூட்டான முக பாவனைகள், சிரிப்பு, அசால்ட்டான உடல்மொழி ஆகியவற்றால் தனிச்சிறப்பு மிக்க நடிகராக தன்னை உருமாற்றிக்கொண்டார். தந்தையால் சுலபமாக நடிகராகிவிட்டார் என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் தனது கடின உழைப்பால் பதிலடி கொடுத்தார்.

ரசிகர்களுக்கு பண்டிகை : ரீமேக் படமாக இருந்தாலும் போக்கிரி படத்தில் தனது வித்தியாசமான உடல்மொழியால் அசலின் சாயல் தெரியாதபடி நடித்து வெற்றி கண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இவர் நடித்து வெளியான துப்பாக்கி, கத்தி, தெரி, மெர்சல், பிகில், மாஸ்டர் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்கள் என்ற‌ சாதனையை படைத்துள்ளன. இன்று இவர் படங்கள் வெளியாக பண்டிகை நாட்கள் தேவையில்லை. இவர்‌படம் வெளியாகும் நாள்தான் ரசிகர்களுக்கு பண்டிகை என்ற நிலை‌ ஏற்பட்டுள்ளது.

தனி மார்க்கெட் : தனக்கென தனி மார்க்கெட் உருவாகும் வரை மாஸ் மசாலா படங்களில் கவனம் செலுத்திய விஜய், சமீபத்திய காலங்களில் சமூக அக்கறையுள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். நிஜத்திலும் சமுகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு‌ குரல் கொடுத்துவரும் அவர் அதனை தனது படங்களிலும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வம்சி இயக்கத்தில் தனது முதல் தெலுங்கு படமான வாரிசு படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக மாஸ்டர், விக்ரம்‌ என அசுர பாய்ச்சலில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கிறார். தற்போது தளபதியாக உயர்ந்திருக்கும் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. அடுத்து அவரது திட்டம் என்ன என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: Varisu secondlook: அடுத்தடுத்து வரவிருக்கும் வாரிசு அப்டேட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.