ETV Bharat / entertainment

நானியின் 'ஹாய் நானா' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்! - Sivakarthikeyan released the second song

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் 'ஹாய் நானா' திரைப்படத்தின் இரண்டாம் பாடலான 'கண்ணாடி கண்ணாடி'-யை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

Actor Sivakarthikeyan released the second song from Nani film Hi Nana
நானியின் 'ஹாய் நானா' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:39 PM IST

நானியின் 'ஹாய் நானா' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

சென்னை: நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'ஹாய் நானா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீது உள்ள ஆர்வத்தை இந்த ஜோடி அதிகப்படுத்தியுள்ள போதிலும், 'ஹாய் நானா' ஒரு வழக்கமான காதல் கதை அல்ல என்று சொல்லப்படுகிறது.

அப்பா-மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை 'ஹாய் நானா' சித்தரிக்கும் என கூறப்படுகிறது. ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். நானியின் மகளாக கியாரா கண்ணா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலான 'நிழலியே' பாடல் வெளியாகி நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி, 'ஹாய் நானா' திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக, இரண்டாம் பாடலான 'கண்ணாடி கண்ணாடி'-யை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

“அப்பா-மகள் உறவு என்பது தெய்வீகமானது. நானி நடிக்கும் 'ஹாய் நானா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கண்ணாடி கண்ணாடி' பாடல் அனைத்து தந்தைகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்," என்று தனது X சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. மதன் கார்க்கியின் வரிகள் மனதை தொடுகின்றன. இப்பாடலுக்கு உணர்ச்சித் ததும்ப இசையமைத்துள்ள ஹேஷாம் அப்துல் வஹாப், அதை மிகவும் உயிரோட்டத்துடன் பாடியுள்ளார்.

வயலின், புல்லாங்குழல், பாஸ் கிதார் உள்ளிட்ட இசைக்கருவிகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு ஆத்மார்த்தமான பாடலுக்கு வலு சேர்த்துள்ளன. நானி மற்றும் கியாரா கண்ணாவுக்கு இடையேயான அழகான புரிதல் இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். முழு நீள குடும்ப படமான 'ஹாய் நானா', சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். இப்படத்திற்கு சதீஷ் ஈவிவி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

'ஹாய் நானா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று வெளியாகிறது. கண்ணாடி கண்ணாடி பாடல் வெளியாகி தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: உலக அளவில் ரூ.1100 கோடி வசூல் செய்த ஜவான்! பாலிவுட்ல இதான் ஃபர்ஸ்டாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.