ETV Bharat / entertainment

எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம் - Television Training Institute

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

author img

By

Published : Sep 8, 2022, 10:43 PM IST

சென்னை: வேளச்சேரியில் உள்ள தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் பல தரப்பட்டத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும்.

தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:என் மகள் காதல் திருமணமா? - விளக்கம் அளித்த ராஜ்கிரண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.