ETV Bharat / entertainment

கமல் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட புகழ், குரேஷி - முழு விவரம்! - புகழ் வீடியோ

Biggboss kamal maya issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயா குறித்து நடிகர்கள் புகழ் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் குறித்து சர்ச்சை பேச்சு
கமல் குறித்து சர்ச்சை பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 5:28 PM IST

கமல் குறித்து சர்ச்சை பேச்சு

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மிகவும் பிரபலமானதாகும். இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7வது சீசன் இன்றோடு முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வரும் நிலையில், குறிப்பாக இந்த சீசனில் கமல்ஹாசனின் செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை மாயா, கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்திருந்ததால், அவருக்கு ஆதரவாக கமல் செயல்படுகிறார் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சின்னத்திரை நடிகர்கள் புகழ் மற்றும் குரேஷி ஆகியோர், கமல்ஹாசன் மற்றும் மாயா குறித்து நகைச்சுவை செய்திருந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிய நிலையில், கமல்ஹாசனின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் புகழ் மற்றும் குரேஷி ஆகிய இருவரும் தனித்தனியாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “நடிகர் கமல்ஹாசன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில் எங்களுக்கு கொடுத்த ஸ்கிரிப்டைத்தான் செய்தோம். இனிவரும் காலங்களில் இது போல் செய்ய மாட்டோம். இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகப் போகும் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், கமல் ரசிகர்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நான் யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி செய்வேன் என்றும், என்னையும் மீறி இது டிரெண்டாகிவிட்டது, இனி இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குரேஷி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொங்கல் வசூலில் கேப்டன் மில்லரை மிஞ்சிய அயலான்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.