ETV Bharat / entertainment

'லியோ' படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட மன்சூர் அலிகான்!

லியோ படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக நடிகர் மன்சூர் அலி கான் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 11, 2023, 4:53 PM IST

சென்னை: பிக்பாஸ் பிரபலங்கள் அமீர் இயக்கத்தில், பாவனி ரெட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் செய்தியாளர் சந்திப்பானது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பல்வேறு திரைப்ரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் இதுவரை 350 படங்கள் மேல் நடித்துள்ளேன் ஆனால் நான் முதல் முதலாக நடித்த தெலுங்கு திரைப்படத்தில் நானும் நடிகை சாதனாவும் இணைந்து நடித்தோம். எத்தனையோ படங்கள் நடித்தும் அது என் முதல் படம் என்பதால் அது மறக்க முடியாத அனுபவம். அமீர் என்னிடம் கதையைப் பற்றிச் சொன்னார், ஆனால் அவர் நடன வடிவமைப்பாளர் என்று சொல்லவில்லை. அமீர் நீங்கள் என்ன அவ்வளவு பெரிய பெரிய நடன இயக்குநரா, என் அளவுக்கு நீங்கள் நடனமாடுவீர்களா என்று கேட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ”நான் தற்போது நடித்த வரும் சரக்கு படம் தமிழ்நாட்டின் அரசியலைத் திருப்பி போடும் விதமாக இருக்கும். அதை முடித்துவிட்டுத் தான் லியோ படத்தில் நடிப்பேன் எனக்கு அந்த படத்தில் அதிக நாட்கள் தேதிகள் கொடுத்துள்ளனர். நாட்டில் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் வர இருக்கிறது நாட்டின் தலைவிதியை மாற்ற யாரும் தயாராக இல்லை. அரசியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு மக்கள் உள்ளனர்.

அதுதான் நமக்கு முக்கியமே தவிர வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழக மக்கள் சிரமப்படுகிறார்கள், தமிழ்நாட்டில் தமிழன் எங்கே இருக்கிறான் என்று கூட தெரியவில்லை வட மாநிலத்தவர்கள் லாரி லாரி ஆக இல்லாமல் ரயில் ரயிலாக வந்து இறங்குகிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை எந்த இடத்திலும் தமிழர்களைப் பார்க்க முடியவில்லை தமிழர்களுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை அதற்கான விடை என்னுடைய சரக்கு படத்தில் இருக்கும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும், ஆளுநர் அதிகார வர்க்கமாகவோ இருக்கக் கூடாது, ஆளுநர் மாளிகை முன்னே போய் சென்று பாருங்கள் ஒரு தீவிரவாதியை அடைத்து வைத்திருப்பது போல் 100 பேரிகார்டுகளை வெளியே போட்டு 1000 காவலர்களை வெளியே நிறுத்தி வைத்திருப்பார்கள் இது போன்று எல்லாம் கடந்த காலங்களில் கிடையாது.

ஆளுநர் மாளிகை உள்ளே ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஆளுநருக்கு எதற்கு அவ்வளவு ஏக்கர் நிலம், சாதாரண மக்கள் இன்னும் முன்னேறாமல் இருக்கின்ற நிலையில் எதற்கு 650 ஏக்கரில் ஆளுநருக்கு இடம் அங்கு எதற்கு அவ்வளவு பெரிய மாளிகை, விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள் ஆளுநர் மாளிகையில் 10 விளையாட்டு மைதானங்களை கட்டலாம். ஆளுநர் தேவையில்லாத வேலைகளைச் செய்கிறார் அவருக்கு என்ன தேவையோ அதை செய்ய மாட்டார். மக்களுக்காகப் படம் எடுத்தால் கண்டிப்பாக ஓடும் வாச்சாத்தி பிரச்சனைகளைத் தெரிவித்து விடுதலைப் படத்தை எடுத்த வெற்றிமாறனைப் பாராட்டுகிறேன்” என்றார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் ”எனக்கு இயக்குநராக வேண்டும் என்பது தான் ஆசை. நான் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்தது கிடையாது. மே மாத இறுதியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் பெயர் ப்ரோமோ விரைவில் வெளியிடப்படும்” எனக் கூறினார்

தொடர்ந்து பேசிய பாவனி, ”ரசிகர்கள் அனைவரும் எங்கள் திருமணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த படத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இந்த படத்திற்குப் பிறகு திருமணத்தைப் பற்றி நாங்கள் ஆலோசனை செய்வோம்” என்றார்

இதையும் படிங்க: 'அயோத்தி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சசிகுமார் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.