நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,
'அன்புள்ள லோகேஷ்,
பெயருக்கு முன் ”திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக்கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால், மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை உள்ளபடியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர், என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.
யூ-ட்யூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துகள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்.
உங்கள் நான்
-
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj
">“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj
கமல்ஹாசன்’
இந்த கடித்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ”லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்”, இதனைப் படிக்கும்பொழுது, ’என் உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது; நன்றி ஆண்டவரே!’ என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம்: ஆனால்.. ' - பார்த்திபன் பேச்சு!