ETV Bharat / entertainment

நடிகர் தனுஷின் கனவு லட்சியம்.. யூத் ஐகான் விருதில் தனுஷ் கூறியது என்ன? - tamil cinema news

நான் 40 வயதில் யூத் ஐகான் என்னும் விருதை பெறுகிறேன். வெல்லவும் சாதிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு ஒரு லட்சிய கனவு இருக்கிறது. எனது கனவின் காரணமாக நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன் என நடிகர் தனுஷ் கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 21, 2023, 1:35 PM IST

சென்னை: CII - தக்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில் கடைசி நாளான நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நடிகர் தனுஷ், இயக்குநர் ஆர்கே செல்வமணி, நடிகை ஷோபனா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி கலந்துக்கொள்ள முடியாததால் இணைய வழியாக வீடியோ மூலம் அவர் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்டார். மேலும் நடிகர் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது.

மேலும் நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான்(Youth Icon) விருது வழங்கப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய நடிகர் தனுஷ், "குஷ்பூ முதலில் இந்த விழாவிற்கு என்னை அழைத்த போது, நான் அங்கு பேச வேண்டிய அவசியம் இல்லையே என்று கேட்டதற்கு, அவரும் பேச வேண்டியதில்லை என்றார். அதனால் நான் இந்த மேடையில் பேசுவதற்கு எதும் தாயார் செய்து வரவில்லை. அதனால் எனக்கு தோன்றுவதை பேசுகிறேன். நான் 40 வயதில் யூத் ஐகான் என்னும் விருதை பெறுகிறேன். வெல்லவும் சாதிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு ஒரு லட்சிய கனவு இருக்கிறது. எனது கனவின் காரணமாக நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

நான் 30 வயதில் இருக்கும் போது 50 வயது ஆட்கள் உங்களுக்கு வெரும் 30 வயது மட்டுமே ஆகிறது, நீங்கள் மிகவும் இளமையாக உள்ளீர்கள் என்று சொன்னார்கள். தற்போது 40 வயது ஆகிறது, 60 வயது உள்ளவர்கள் இன்றும் நீங்கள் மிகவும் இளமையாக உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள். இந்த மேடையை எனது பெற்றோர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் இடமாக பார்க்கிறேன்.

என் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் எனக்காக இன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படபபிடிப்பை ரத்து செய்துள்ளார். அதனால் என் குழந்தைகளுடனும் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசியபோது, "நான் சமீபத்தில் டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன், உங்கள் திரைப்படங்களில் சமீபத்திய சொற்பொழிவுகளைப் பார்க்க முடிந்தது. விளையாட்டும் சினிமாவும் எல்லைகளை கடந்துவிட்டன. தமிழ்நாடு வளமான கலாச்சாரம் மற்றும் சிறந்த அறிவுத் தளத்தைக் கொண்டுள்ளது. சினிமா நமது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை படம்பிடிக்கிறது என்று நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களில் தென் திரையுலகைச் சேர்ந்த பலருடன் எங்கள் அரசு விவாதித்தது.

இந்தியத் திரையுலகம் உலகிலேயே அதிக தயாரிப்பை உருவாக்குகிறது. ஆர்ஆர்ஆர், எலிஃபண்ட் விஸ்பர் போன்ற குறும்பட ஆவணப்படங்கள் உலக அளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தன. பிரதமர் சமீபத்தில் நீலகிரியில் உள்ள முதுமலை யானைகள் முகாமுக்கு சென்றார். பழங்குடியின சமூகத்தை சந்தித்தார். உயிரைக் காப்பாற்றிய மற்றும் ஆபத்தான பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருளர் சமூகத்திற்கு சமீபத்தில் பத்ம விருது வழங்கப்பட்டது.

சினிமாவில் நீங்கள் பார்ப்பது நமது சமூகத்தின் பிரதிபலிப்பு. சினிமாவில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. சினிமா ஊழல் இல்லாத தொழிலாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 2030ல் 70 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு வைத்துள்ளது. கோவிட் காலங்களில் திரைப்படத் துறையை மகிழ்வித்தது, நீங்கள் அதை தொடர்ந்து செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

OTT இல் சிந்தனைகள் வேகமாக மாறுகின்றன, பல சவால்கள் வரலாம். திறமையானவர்களை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்கு சவாலாக உள்ளது. தனியுரிமை காரணமாக ஊடகத்துறையில் ஒவ்வொரு மாதமும் 2.3 பில்லியன் டாலர் இழப்புகள் ஏற்படுவதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய ஒளிப்பதிவு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என பேசினார்

இதையும் படிங்க: "பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, விசாரணை, ஜெய் பீம் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.