ஹைதராபாத்: 69வது தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) நேற்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமா சகாப்தத்தில் தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
Bunny பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட கதை: Bunny, ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் தந்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். அவரது தாத்தா பழம்பெரும் நடிகர் ஆவார். திரை பின்புலம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் அல்லு அர்ஜுன் அவ்வளவு எளிதாக வெற்றியைப் பெற்றுவிடவில்லை. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் தடம் பதித்தவர் முதன்முதலாக ‘கங்கோத்ரி’ படத்தில் கதாநாயகனாகக் களம் கண்டார்.
எப்படி ஹீரோ ஆனார்? சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்தநாளையும் அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அப்படி அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரசிகர்களில் ஒருவராக நடனமாடிக் கொண்டிருந்தார் அல்லு அர்ஜுன். அப்போது அல்லு அர்ஜுனை பார்த்த இயக்குநர் ராகவேந்திர ராவ் உடனடியாக அவரது தாய் நிர்மலாவிடம் சென்று அவரை ஒரு நாள் ஹீரோ ஆக்குவேன் என்று உறுதியளித்து, 100 ரூபாயை முன்பணமாகக் கொடுத்துள்ளார். அதன் பிறகு 'கங்கோத்ரி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அல்லு அர்ஜுன், ராகவேந்திர ராவ் கொடுத்த அந்த நூறு ரூபாய் நோட்டை இன்னமும் பத்திரமாக வைத்து உள்ளாராம்!
-
Maverick director @aryasukku and our producers #NaveenYerneni garu and #RaviShankar garu shower their happiness and love on Icon Star @alluarjun for becoming THE FIRST ACTOR FROM TFI to win the BEST ACTOR at the National Awards ❤️#Pushpa ❤️🔥#ThaggedheLe pic.twitter.com/RvxX7NbKnM
— Mythri Movie Makers (@MythriOfficial) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maverick director @aryasukku and our producers #NaveenYerneni garu and #RaviShankar garu shower their happiness and love on Icon Star @alluarjun for becoming THE FIRST ACTOR FROM TFI to win the BEST ACTOR at the National Awards ❤️#Pushpa ❤️🔥#ThaggedheLe pic.twitter.com/RvxX7NbKnM
— Mythri Movie Makers (@MythriOfficial) August 24, 2023Maverick director @aryasukku and our producers #NaveenYerneni garu and #RaviShankar garu shower their happiness and love on Icon Star @alluarjun for becoming THE FIRST ACTOR FROM TFI to win the BEST ACTOR at the National Awards ❤️#Pushpa ❤️🔥#ThaggedheLe pic.twitter.com/RvxX7NbKnM
— Mythri Movie Makers (@MythriOfficial) August 24, 2023
ஸ்டைலிஷ் ஸ்டாரையும் துரத்திய விமர்சனங்கள்: அல்லு அர்ஜுனின் முதல் படமாக 2003ல் வெளியான 'கங்கோத்ரி' பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற போதும் அவர் பல விமர்சனங்களைச் சந்தித்தார். அவரது தோற்றத்தைப் பலரும் கேலி செய்து கருத்துகளைத் தெரிவித்தனர். அவரைத் துரத்திய விமர்சனங்களுக்கு அடுத்த படமான ‘ஆர்யா' மூலம் பதிலடி அளித்தார் அல்லு அர்ஜுன்.
முதல் படத்தில் கேலி செய்து முழங்கியவர்களை எல்லாம் இரண்டாவது படத்தில் 'ஃபீல் மை லவ்' என முணுமுணுக்கச் செய்தார். இந்த படத்திற்குப் பிறகு அவரது புகழ் அண்டை மாநிலங்களுக்கும் பரவத் துவங்கியது, அவருக்கு அங்கும் ரசிகர்கள் உருவாகத் துவங்கினர். ரசிகர்களை தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதும் இவர், “அனைவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னிடம் ராணுவம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சாதித்த பெரிய சொத்து என் ரசிகர்கள் தான்” என்கிறார்.
குடும்பத்திலும் ஹீரோ தான்! திரைப்பிரபலங்கள் பலருக்கும் குடும்பத்துடன் செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை. பெரிய நடிகர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமைவதேயில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் அதையும் ரிலாக்ஸ் ஆக கையாள்பவர். தன்னுடைய பிஸியான ஷெட்யூல்களிலும் கூட அவர் அவர் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. அதனால்தான் ஷூட்டிங்கில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுகிறார்.
வட்டமடித்த ரசிகர்கள்: சிக்ஸ் பேக் மோகம் திரையுலகை ஆட்கொண்ட போது 2007-இல் வெளியான ‘தேசமுதுரு’ படத்தில் முதன்முறையாக சிக்ஸ் பேக் லுக்கில் அல்லு அர்ஜுன் காணப்பட்டார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதையடுத்து 2010ல் 'வருடு' படம் வெளியானது, இப்படங்களுக்குப் பின்னர் ரசிகர்கள் இவரது ஸ்டைலை பின்பற்றத் துவங்கினர். 2021-இல் வெளியான 'புஷ்பா' படத்தின் மூலம், அவர் உலகம் முழுவதும் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். படத்தில் அவரது வசனமான, “புஷ்பான்னா FLOWERன்னு நினைச்சிங்களாா FIRE” என இவர் பேசிய வசனம் வலைத்தளத்திலும் fire ஆக பரவியது.
வெற்றிக் கூட்டணி: அல்லு அர்ஜுனின் கரியரில் மறக்க முடியாத வெற்றியை ‘ஆர்யா’ படத்தின் மூலம் அளித்தவர் சுகுமார். அதன்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான ‘ஆர்யா 2' படமும் க்ளிக் ஆனது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுனும் - சுகுமாரும் ‘புஷ்பா’ படத்திற்காக மீண்டும் கைகோர்த்த போது இந்த வெற்றிக் கூட்டணியை திரையுலகம் உற்று நோக்கத் துவங்கியது.
படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த நிலையில் படமும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது. புஷ்பா உலகம் முழுவதும் ரூ.365 கோடி வசூல் செய்தது. புஷ்பா படம் இதுவரை சைமா மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றிருந்தது. இந்நிலையில் இப்படம் சிறந்த நடிகர் (அல்லு அர்ஜுன்) மற்றும் சிறந்த இசையமைப்பாளர் (தேவிஸ்ரீ பிரசாத்) ஆகிய பிரிவுகளில் தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளது.
தன்னைத் துரத்திய உருவ கேலியால் முடங்கி போகாமல் துணிந்து முன்னோக்கிச் சென்ற அல்லு அர்ஜுன் இன்று தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகருக்காகத் தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையைத் தனதாக்கி உள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 69-வது தேசிய விருது.. விருதுபெற்ற படங்கள் என்னென்ன?