ETV Bharat / elections

சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி மோடியின் செல்ல நாய்கள் -சந்திரபாபு நாயுடு! - தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்

அமராவதி: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி மோடியின் செல்ல நாய்கள் என ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

andhra cm calls jagan kcr are modis pet dogs
author img

By

Published : Apr 9, 2019, 9:07 AM IST

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 18 தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உட்பட 20 மாநிலங்களுக்கு வரும் வியாழக்கிழமை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம் மஜ்ஜிலிபட்டினத்தில் தெலுங்கு தேச கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘ஜெகன் மோகன் ரெட்டி நாய் பிஸ்கட்டை சாப்பிடுகிறார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியின் செல்ல நாய்கள்.

ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி பரப்புரைக்காக மோடியும், சந்திரசேகர ராவும் எதற்காக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டும். நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் ஒரு ஓட்டுக்கூட உங்களால் வாங்க முடியாது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.