ETV Bharat / elections

ஏ.சி.சண்முகம் நிறுவனங்களில் ஏன் சோதனை நடத்தவில்லை? ராஜ கண்ணப்பன் கேள்வி - சோதனை நடத்தவில்லை

சிவகங்கை: 'இரண்டு கல்லூரி வைத்திருக்கும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர் 30 கல்லூரிகள் நடத்தும் ஏ.சி.சண்முகம் நிறுவனங்களில் சோதனை நடத்தாது ஏன்?' என ராஜ கண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜ. கண்ணப்பன் கேள்வி
author img

By

Published : Apr 12, 2019, 7:59 AM IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, 'இரண்டு கல்லூரி நடத்தும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அதேபோல் 30 கல்லூரிகள் நடத்தும் ஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தாது ஏன்?

இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி, நான்கு கோடி பேரின் வேலைவாய்ப்பினை பறித்து விட்டதுதான் அவரது சாதனையாகும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவே ஐந்து வருடம் ஆக்கியவர்கள் அது செயல்பட 50 ஆண்டுகள் ஆக்குவார்கள்.

தமிழ்நாட்டிற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மோடி என யார் வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். இந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்' என நம்பிக்கை தெரிவித்தார்.

சிவகங்கை    ஆனந்த்
ஏப்ரல்.11

இரண்டு கல்லூரி நடத்தும்  துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியவர்கள் 30 கல்லூரிகள் நடத்தும் ஏ.சி.சண்முகம் நிறுவனங்களில் நடத்தாது ஏன்? -ராஜ.கண்ணப்பன் கேள்வி

சிவகங்கை: இரண்டு கல்லூரி நடத்தும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியவர்கள் 30 கல்லூரிகள் நடத்தும் ஏ.சி.சண்முகம் நிறுவனங்களில் நடத்தாது ஏன்? என்று ராஜ.கண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர், இரண்டு கல்லூரி நடத்தும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியவர்கள், 30 கல்லூரிகள் நடத்தும் ஏ.சி.சண்முகம் நிறுவனங்களில் நடத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் இரண்டு கோடி வேலைவாய்ப்பு தருவதாக கூறிய மோடி, 4 கோடி வேலைவாய்ப்பினை பறித்து விட்டதாக ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவே 5 வருடம் ஆக்கியவர்கள் செயல்பட 50 ஆண்டுகள் ஆக்குவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அமித்ஷாவும், மோடியும் வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்றவர், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.