தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் பரமசிவனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 'மோடி ஆட்சிக்கு வந்த பின்பு பொதுமக்களுக்கு கொடுப்பதாக சொன்ன ரூ.15 லட்சத்தை இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை 350 ரூபாயாக இருந்தது, ஆனால் தற்போது ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கேபிள் டிவி மாத சந்தா 100 ரூபாயாக இருந்தது, ஆனால் தற்போது 270 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதுபோக மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி மூலம் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசும் வரியை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா அல்லது பிரதமர் மோடியா?' என கேள்வி எழுப்பினார்.