வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுங்கையூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, 'மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு 27 கட்சிகள் மட்டுமல்லாமல், 450 சமுதாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆகையால் இது மெகா கூட்டணி மட்டுமல்ல, வெற்றிக்கூட்டணியாகும். ஆனால் இந்தத் தேர்தலில் திமுக பல இடங்களில் வைப்புத்தொகை இழக்கும்.
இந்தத் தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதை ஆளுங்கட்சியால் மட்டும் தான் சரிசெய்ய முடியும். எக்காரணத்தைக் கொண்டும், எதிர்க்கட்சியால் சரிசெய்ய முடியாது. மேலும் இந்த மக்களவைத் தேர்தலுடன் திமுக என்ற கட்சி முடிவுக்கு வரும். அக்கட்சியை அதன் தலைவர் ஸ்டாலின்தான் முடித்துவைப்பார்' என அவர் தெரிவித்தார்.