ETV Bharat / elections

நீதிமன்றத்தை அவமதிக்கும் தலைவர்கள் மீது நடவடிக்கை - பி ஆர் பாண்டியன் - ராகுல்காந்தி

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி, நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, ராகுல்காந்தி ஆகியோர் மீது நடவடிக்கைகள் எடுக்க பி.ஆர் பாண்டியன் மனு அளித்துள்ளார்.

பிஆர் பாண்டியன் மனு
author img

By

Published : Apr 16, 2019, 2:24 PM IST

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் புகார் மனு ஒன்றைத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் ’சேலம் எட்டு வழிச்சாலை அமைக்கப்படுதற்கு எதிராக விவசாயிகள் கடும் போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து, உயர் நீதிமன்றமும் எட்டு வழிச்சாலை அமைக்க தடை விதித்தது.

பிஆர் பாண்டியன்

ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சேலம் எட்டு வழிச்சாலையை அமைத்தே தீருவோம் எனப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணைக் கட்ட சட்டத்திற்கு புறம்பாக அனுமதி அளிப்பதாக ராகுல் காந்தி கர்நாடக மாநில தேர்தல் பரப்புரையில் பேசியதாக முதலமைச்சர் குறிப்பிட்டது உண்மை என்றால், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதால், அவரது பேச்சு குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளோம்’ என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.04.19

நீதிமன்ற உத்தரவை மீறி, நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில் பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் மீது நடவடிக்கைகள் எடுக்க பி.ஆர்.பாண்டியன் மனு...

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் புகார் மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த பின் கொடுத்த பேட்டியில், 
சேலம் 8 வழிச்சாலை அமைக்கப்படுதற்கு எதிராக விவசாயிகள் கடும் போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து,  உயர் நீதிமன்றமும் 8 வழிச்சாலை அமைக்க தடை விதித்தது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சேலம் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் எனப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட சட்டத்திற்கு புறம்பாக அனுமதி அளிப்பதாக ராகுல் காந்தி கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக முதல்வர் குறிப்பிட்டது உண்மை என்றால், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதால், அவரது பேச்சு குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை கொடுத்துள்ளோம் என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.