ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அத்தொகுதிக்குட்பட்ட வசவப்பபுரம், வல்லநாடு, தெய்வ செயல்புரம், முடிவைதானேந்தல் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது வைகோ பேசியபோது, அனலாக தமிழ்நாட்டை தகித்து எடுத்த அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சிய அமையும் என தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை மக்கள் மீது திணிக்கப் பார்ப்பதாகவும், ஸ்டெர்லைட் நாசக்கார நிறுவனத்துக்காக காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கொண்டு 13 அப்பாவிகளைச் சுட்டுவீழ்த்தியதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, வாழ்வாதாரம் பறிபோவதைத் தடுக்க முன்வராத ஆட்சி இந்த அதிமுக ஆட்சி என்று விமர்சித்தார்.
மேலும், தேர்தலுக்காக பிரதமர் மோடி மத வெறியைத் தூண்டிவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கிறார் என்றும், அவரைப்போல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர் யாரும் இல்லை என்று கடுமையாகச் சாடினார்.