ETV Bharat / elections

சுகாதாரம் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பேன்: திண்டுக்கல் மநீம வேட்பாளர் உறுதி! - மக்கள் நீதி மய்யம்

திண்டுக்கல்: மருத்துவர் என்ற முறையில் சுகாதாரம் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பேன் என திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சுதாகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்
author img

By

Published : Apr 8, 2019, 7:42 PM IST

கருணாநிதி - ஜெயலலிதா என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் களமாக இத்தேர்தல் உள்ளது. இதில் அதிமுக - திமுக ஒருபுறம் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக மறுபுறம் போட்டி போட்டுக்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நேரடியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது அரசியல் பிரவேசம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இந்த தேர்தலில் இவரும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏனெனில், தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரையில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதளவு பிணைந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரத்யேக பேட்டி

இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் டாக்டர் சுதாகரன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய முதன்மையான திட்டங்கள் சுகாதாரம் சார்ந்தது. ஏனெனில், மருத்துவர் என்ற முறையில் நான் சுகாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். மேலும், பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி திண்டுக்கல் மாநகரில் அமைக்கப்படும். அதேபோல, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய தரமான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Intro:திண்டுக்கல் 8.4.19

மருத்துவர் என்ற முறையில் சுகாதாரம் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பேன் : மக்கள் நீதி மய்யம் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சுதாகரன் வாக்குறுதி

Body:தமிழக அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் களமாக இத்தேர்தல் உள்ளது. இதில் அதிமுக-திமுக ஒருபுறம் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக மறுபுறும் போட்டி போட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரமான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கி நேரடியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது அரசியல் பிரவேசம் பலவகை விமர்சனங்களை சந்தித்தாலும் இவரும் இந்த தேர்தலில் கவனிக்கப்படவேண்டிய ஒரு கட்சியாக மாறி உள்ளார். ஏனெனில், தமிழக அரசியலைப் பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதளவு பிணைந்துள்ளது. எம்ஜிஆர் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா என திரை நட்சத்திரங்கள் ஆதிக்கம் தமிழக அரசியலில் அகற்ற முடியாத அளவு பதிந்துள்ளது.

இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் சுதாகரன் போட்டியிடுகிறார். அவர் நமது ஈ டிவி பாரதத்திற்கு அளித்த பேட்டி,

1. உங்களது பார்வையில் திண்டுக்கல் தொகுதியின் முதன்மையான பிரச்சனை எது? அதை தீர்க்க நீங்கள் செயல்படுத்த உள்ள திட்டங்கள் எவை?

என்னுடைய முதன்மையான திட்டங்கள் சுகாதாரம் சார்ந்தது. ஏனெனில் மருத்துவர் என்ற முறையில் நான் சுகாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். மேலும், பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி திண்டுக்கல் மாநகரில் அமைக்கப்படும். அதேபோல அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய தரமான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.