நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் காலை ஏழு மணி முதலே வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
திருச்செங்கோடு பகுதியில் இரு வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. தற்போது அந்த பழுது சரி செய்யப்பட்டு பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேலும் நாமக்கல் கோட்டை பள்ளியில் வாக்குசாவடி மைய எண் 172-ல் இயந்திர கோளாறினால் 7.45 மணிக்குத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது.