ETV Bharat / elections

'வசந்தகுமாருக்கு கணக்கு தெரியாது' - பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி!

கன்னியாகுமரி: கணக்கு தெரியாத ஒரு வேட்பாளரை காங்கிரஸ் கட்சி போட்டியிடவைப்பதாக வசந்தகுமாரின் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Apr 6, 2019, 4:29 PM IST

குமரி மாவட்டத்தில், தேசிய ஜனநாகயகக் கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று தீவுர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பரப்புரைக்கிடையே அவர் செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வசந்தகுமார், இவர் மீது வைத்த குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "நான் நாடாளுமன்றத்திற்கு இதுவரை ஏழு நாட்கள் மட்டுமே சென்றிருக்கிறேன் என வசந்தகுமார் கூறி வருகிறார், உண்மையில் கணக்கு தெரியாத ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்திருக்கிறது காங்கிரஸ். ஊடகங்களையும், நாடாளுமன்ற ரெக்கார்டுகளையும் ஆராய்ந்து பார்க்கச் சொல்லுங்கள், அதிகப்படியாக பாரளுமன்றம் சென்றதில் நான் முதல் இடத்தில் இருக்கிறேன்" என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மேலும் பாஜக குறித்து பா.சிதம்பரம் தெரிவித்த கருத்து தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதலில் துறைமுகம் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என கூறிய அவர் தற்போது நான் துறைமுகத்திற்கு எதிரானவர் இல்லை என கூறி வருகிறார். இது யாரை ஏமாற்றும் செயல், 20 லட்சம் மக்களை ஏமாற்றப் பார்க்கிறது காங்கிரஸ்" என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். கமலஹாசன் இந்த தேர்தலில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்வார் என நினைத்தேன். ஆனால் ஒரு இடத்திலும் சூறாவளியை காணவில்லை. தயவுசெய்து மக்கள் நீதி மையத்தில் வளர்க்கும் வழியை பாருங்கள் என அவர் தெரிவித்தார்

Body:குமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கமலஹாசன் இந்த தேர்தலில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்வார் என நினைத்தேன். ஆனால் ஒரு இடத்திலும் சூறாவளியை காணவில்லை. தயவுசெய்து மக்கள் நீதி மையத்தை வளர்க்கும் வழியை பாருங்கள். தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.
பா.சிதம்பரம் தன்னை ஒரு படிப்பறிவற்ற சாதாரண கிராமத்தில் வசிக்கும் மனிதராக நினைக்க கூடாது. பாஜகவின் அகில இந்திய தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்தி இருந்தது அவருக்கு தெரியாதா? தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்தபோது பெற்ற பதவிகள் குறித்து தெரியாதா?.
கணக்கு தெரியாத ஒருவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டுள்ளனர். அதிக அளவில் பாராளுமன்றம் சென்ற என்னை ஏழு நாள் சென்றதாக வசந்தகுமார் கூறி வருகிறார். ஆண்டிற்கு 365 நாட்கள் உள்ளதா என்பது கூட அவருக்கு தெரியாதா?. துறைமுகம் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என கூறிய அவர் தற்போது நான் துறைமுகத்திற்கு எதிரானவர் இல்லை என கூறி 20 லட்சம் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
மேலும், பூட்டிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என கூறியுள்ளார். குமரி மாவட்டத்தை பற்றி ஏபிசிடி கூட தெரியாதவராக அவர் இருக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் செய்தவை குறித்து தெரிந்துகொள்ள வசந்தகுமாருக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.