தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் என் கடைமையை செய்துவிட்டேன். நீங்கள்?” என தான் வாக்கு செலுத்திய புகைப்படத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் போல் பல்வேறு நட்சத்திரங்களும் தங்கள் வாக்கினை செலுத்துமாறு தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றனர்.