மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ராவில் பாஜக சார்பாக நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், " ஒரு காலத்தில் நம் நாட்டில் 126 மாவட்டங்களில் நக்சல்கள் பரவிக் கிடந்தனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதனை 7-8 மாவட்டங்களில் ஒடுக்கினோம். இந்த ஆட்சி தொடர்ந்தால் 3-4 வருடங்களில் நக்சல்களை முழுவதுமாக ஒழிப்போம் " என்றார்.