ETV Bharat / elections

தென்காசி ஆட்சியர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

author img

By

Published : Mar 6, 2021, 9:57 PM IST

தென்காசி: ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கணினி மூலம் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்வு செய்து அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி தேர்தல் ஏற்பாடுகள்
தென்காசி தேர்தல் ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடைய நல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் ஆயிரத்து 884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சூழலில், ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, கணினி உதவியுடன் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் தலைமை வகித்தார்.

அதன்படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையையில் ஒதுக்கீடு செய்து, அந்தந்த தொகுதிகளிலுள்ள, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.