ETV Bharat / elections

ஸ்டாலினை கொளத்தூரில் தலைதூக்க விடமாட்டேன் - திருநங்கை அப்சரா பளீர்! - assembly election 2021

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினைத் தோற்கடிப்பேன் என திருநங்கை அப்சரா தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிப்பேன், திருநங்கை அப்சரா, transgender apsara, i will defeat dmk leader stalin in kolathur, kolathur constituency, கொளத்தூர் தொகுதி, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அப்சரா, admk apsara, assembly election 2021, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிப்பேன்
author img

By

Published : Mar 1, 2021, 1:27 PM IST

சென்னை: அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்குத் திருநங்கை அப்சரா தலைமை கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை அப்சரா, “அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளேன். திருநங்கைகளுக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள், உதவிகளைச் செய்து கொடுத்தார்.

அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவருக்குரிய பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. தொடர்ந்து அரசு மீது பொய்களைத் தூற்றி வருகிறார்.

திருநங்கை அப்சரா பேட்டி

அதிமுக ஆட்சியில் திருநங்கைகள் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சமவாய்ப்பு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் உள்பட அனைத்து துறையினருக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியின் திட்டங்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறி கொளத்தூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். கொளத்தூர் தொகுதியில் இனிமேல் ஸ்டாலின் தலை தூக்க முடியாத அளவில் தோற்கடிப்பேன்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.