தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணாவை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி ஆலங்குளம் அருகே ராம்நகரில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் கூறுகையில், ’’தமிழ்நாட்டில் அதிமுக அரசு ஊழலில் வெற்றி நடை வெற்றி நடையிட்டு வருகிறது. இங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இருந்து வருகிறது. இக்காரணங்களால் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பொது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதினால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டும் நோக்கில் வருமானவரி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வருமான வரி மூலம் திமுகவையும் விரட்டி விடலாம் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவை எங்களை பத்துமடங்கு தேர்தல் வேலைகளில் ஈடுபட வைக்கும், ஒவ்வொரு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்’’ எனப் பேசினார்.
இதையும் படிங்க: அண்ணா சிலைக்கு தீ வைப்பு: தலைவர்கள் கண்டனம்