ETV Bharat / elections

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை - திமுக அறிக்கைக்கு மாணவர்கள் சங்கம் வரவேற்பு

author img

By

Published : Mar 14, 2021, 11:04 PM IST

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை என்ற திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

archagar dmk election manifesto
archagar dmk election manifesto

மதுரை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 203 மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை பக்கம்.71 பத்தி.417ல் தமிழ்நாடு அரசால் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட 203 மாணவர்களுக்கு தாங்கள் ஆட்சி வந்தவுடன் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறோம்.

கருவறைக்குள் பிராமணர் அல்லாதோர் நுழைய இயலாமல் தடுக்கப்படும் சனாதனத்தின் கருவறைத் தீண்டாமை நடவடிக்கையினை, தன் நெஞ்சில் தைத்த முள்ளாக பெரியார் அறிவித்தார். கருவறை நுழைவுப் போராட்டங்களை நடத்தினார். அந்த முள்ளினைதான் அகற்றுவதாக கூறி கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் 1971இல் அர்ச்சகர் பணி நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்ட விதிகளை கொண்டு வந்தார்.

இதனை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் சட்டத் திருத்தத்தினை சரியென்று சொன்ன உச்சநீதிமன்றம், அர்ச்சகர் நியமனத்தில் குறிப்பிட்ட தனிப்பிரிவினர் (Sect) தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறிவிட்டது. அதன்பின் 2002ஆம் ஆண்டில் ஆதித்தன் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் மீண்டும் திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நோக்கில் சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டு. பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டு பார்ப்பனரல்லாத சாதிகளை சேர்ந்த 207 மாணவர்களாகிய எங்களுக்கு, சைவ மற்றும் வைணவ ஆகமங்களின் அடிப்படையில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஆதிசிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 2015ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பின் பேரில் குறிப்பிட்ட கோயில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும், அர்ச்சகர் நியமனத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக சாதிய அடிப்படையில் நியமனங்கள் இருக்கக் கூடாது என மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே எங்களோடு பயிற்சி முடித்த மாரிசாமி, 2018ஆம் ஆண்டு மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். 2020இல் தியாகராஜன் என்பவர் மதுரை மாவட்டம் நாகமலை -புதுக்கோட்டையில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசால் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாட்கள் பணிவரைமுறை விதிகள், 2020 {Tamil Nadu Hindu Religious Institutions Employees (Conditions of Service) Rules, 2020} ன் படியும் முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகராவதற்கு ஒருவர் தகுதியுடையவர் என சட்டவிதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட நாங்கள் அனைவரும் அர்ச்சகர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய சூழலில் ஏற்கனவே தங்கள் ஆட்சி நடந்தபோது கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட எங்கள் அனைவரையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர்களாக நியமிப்பதாக தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியான அறிவிப்பே.

2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழகஅரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என எங்களது நியமனத்தில் இருந்த இன்னுமொரு தடையும் அகற்றப்படுதற்கான சாத்தியம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் வயது வரம்பு தளர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் உருவாகி உள்ளது பெருமகிழ்வாக இருக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற 203 மாணவர்களுக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதில் தடைகள் ஏதும் இல்லாத நிலையில், அது நிறைவேறும் நாளினை எதிர்பார்த்து நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

எதிர்வரும் ஆண்டுகளிலும் அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு, பார்ப்பனரல்லாதோருக்கு அர்ச்சகர் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு அவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் கருவறைகளில் சமூக நீதி முழுமையாக நிலைநாட்டப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.