ETV Bharat / elections

100 நாள் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வாக்குச் சேகரித்த பாமக வேட்பாளர்! - சட்டப்பேரவைத் தேர்தல்

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்து அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் மகேஷ்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

100 நாள் வேலை
100 நாள் வேலை
author img

By

Published : Mar 24, 2021, 4:39 PM IST

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு அதிமுக கூட்டணி பாமக வேட்பாளராக அக்கட்சியின் மகேஷ் குமார் என்பவர் போட்டியிடுகிறார்.

அதையொட்டி, காஞ்சிபுரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அவர் தொடர் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் அசோக் நகர், ரயில்வே நிலையம், வையாவூர், மாமல்லன் நகர், கோனேரிகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

100 நாள் வேலை

இதையடுத்து, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு வழியெங்கும் தேங்காய், பூசணிக்காய் ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் கோனேரிக்குப்பம் ஊராட்சியில் குளம் ஒன்றைத் தூர்வாரிக் கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைச் சந்தித்தார்.

இந்த வாக்குச் சேகரிப்பின்போது காஞ்சிபுரம் அதிமுக ஒன்றியச் செயலாளர் தும்பவனம் டி. ஜீவானந்தம், பாமக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட அதிமுக, பாமக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் 100% வாக்களிப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.