ETV Bharat / crime

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை! - தாய் தற்கொலை

தென்தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.

குமரி பெண் தற்கொலை
குமரி பெண் தற்கொலை
author img

By

Published : Jun 24, 2021, 10:55 PM IST

கன்னியாகுமரி: தென்தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள வில்லு பத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (33). கட்டட தொழிலாளியான இவருக்கும் செங்கோட்டையைச் சேர்ந்த திருமலைச்செல்வி (26) என்ற பெண்ணுக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) எனும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் காரணமாக இத்தம்பதி குழந்தைகளுடன் குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் வாடகை வீடெடுத்து தங்கி இருந்தனர்.

வேலைக்கு செல்லாத கணவர்

பாண்டி அப்பகுதியில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். பாண்டி சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் திருமலைச்செல்வி தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கணவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இச்சூழலில், இன்றும் வழக்கம்போல் பாண்டி வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த திருமலைசெல்வி, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து தன்னுடைய 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

தற்கொலை முயற்சி

அப்போது வீட்டிற்கு வந்த பாண்டி தன்னுடைய மனைவி குழந்தைகளின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மூன்று பேருக்கும் முதலுதவி அளித்தனர்.

இதில் இரு குழந்தைகள் உயிர் பிழைத்த நிலையில், திருமலைச்செல்வியை அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை‌ப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் இவ்வழக்கு ஆர்டிஒ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.