ETV Bharat / crime

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

தேனி: கூடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் புஷ்பம் என்ற பெண்மணி உயிரிழந்தார்.

auto accident
auto accident
author img

By

Published : Feb 16, 2021, 6:04 AM IST

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நீதிராஜ், தனது ஆட்டோவில், புஷ்பம் (50), சித்ரா (21), ரேணுகா (19), விஜயராமன் (67), லீலாவதி (60) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றார்.

குமுளி தேசிய நெடுஞ்சாலை, அப்பாச்சி பண்ணை அருகே கட்டுப்பாடு இழந்த ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கூடலூர் அரசமர தெருவைச் சேர்ந்த நடராஜன் மனைவி புஷ்பம் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் நீதிராஜ், சித்ரா (21), ரேணுகா (19), விஜயராமன் (67), லீலாவதி (60) ஆகிய 5 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பொல்லானுக்கு மணிமண்டபம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.