சென்னை: ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று(ஜன.11) காலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத்துறையினா் கண்காணித்து சோதனையிட்டனா்.
அப்போது ஒரு பெண் பயணி உட்பட இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இரணடு பயணிகளையும் சுங்கத்துறையினா் நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, பெண் பயணியை பெண் சுங்க அலுவலர்கள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். அந்த பெண் பயணியின் ஆடைகளுக்குள் தங்க செயின்கள், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அதேபோல் ஆண் பயணியை சோதனையிட்டதில், அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இவர்களிடமிருந்து மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.60.71 லட்சமாகும். இதையடுத்து பெண் பயணி உள்ளிட்ட இரண்டு பயணிகளையும் சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளைஞருக்கு மிரட்டல் - காவல் துறை விசாரணை