சென்னை ராஜாஜி சாலையில் இயங்கிவரும் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் என்ற தனியார் வங்கியில் சொத்து தொடர்பான கடன் மேலாண்மைப் பிரிவு அலுவலராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றிவந்தார்.
இவர், கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரன் என்பவரிடம், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடனை ஒரே நேரத்தில் செலுத்த 3 லட்சம் ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரன் புகாரளித்தார். இந்நிலையில், கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் ஸ்ரீவந்த் விஸ்வேஸ்வரனிடம் கையூட்டு பெற்றபோது, சிபிஐ காவலர்கள் ராஜேந்திரனை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.
அதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 18 லட்சம் ரூபாய், சொத்து ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது.
இதையும் படிங்க: சென்னையில் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்ட வங்கி அலுவலர் - திட்டமிட்டு கைது செய்த சிபிஐ!