ETV Bharat / crime

கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஏழாயிரம்பண்ணை காவல்துறை விசாரணை

விருதுநகர்: சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Feb 17, 2021, 8:58 AM IST

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (36). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது உறவினரான ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (பிப். 16) சிவசங்குபட்டி சாலையில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது, கிணற்றில் குதித்த முத்துப்பாண்டி நீரில் மூழ்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆழமான கிணறு என்பதால் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்க பயந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பல மணி நேரத் தேடுதலுக்குப் பின் முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நத்தை வேகத்தில் நகரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.