சென்னை: மயிலாப்பூர் நார்த்மாடா தெருவில் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் பிஎல்டி என்கிற உலோக சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம்(56) என்பவர் வேலை செய்து வந்தார்.
இதனிடையே கடையில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 6 கிலோ எடையும், ரூ. 30 ஆயிரம் மதிப்பும் உடைய வெண்கலம் மற்றும் பித்தளை சிலைகள் காணாமல் போயின. இதனால் உரிமையாளர் தியாகராஜனுக்கு சண்முகத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் தங்கிருக்கும் அறைக்கு சென்று சோதனை செய்துள்ளார்.
அப்போது சண்முகத்தின் அறையில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் அவரிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9 வெண்கல சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV... தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட முகமூடி ஆசாமி ஒருவர் கைது