கோவா: ஹரியானா மாநில நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத்(42) ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் சோனாலி போகத் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் ஒரு கிளப்பில் சோனாலி போகத் உடன் பார்ட்டியில் இருந்தது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் சோனாலி போகத்தை கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உட்கொள்ளச்செய்தது ஒரு சிசிடிவி பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஐஜிபி ஓம்வீர் சிங் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
மேலும் சுக்விந்தர், சுதிர் இருவரும் வேண்டுமென்றே ஒரு ரசாயனத்தை சோனாலி போகத்தின் பானத்தில் கலந்து குடிக்கச் செய்ததை ஒப்புக்கொண்டதாக ஐஜிபி ஓம்வீர் சிங் பிஷ்னோய் கூறினார்.
இதையும் படிங்க: சோனாலி போகத் உடலுக்கு இறுதி அஞ்சலி