ETV Bharat / crime

பட்டப்பகலில் திட்டமிட்டு ரவுடி மீது கொலைவெறி தாக்குதல் - கொலை முயற்சி

பெரம்பலூரில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முயற்சி
கொலை முயற்சி
author img

By

Published : Aug 6, 2021, 11:11 PM IST

பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சோனி கண்ணன் என்கிற சுதர்சன்.

ரவுடியான இவர் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதால், இவர் மீது பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) மாலை தனது இருசக்கர வாகனத்தில் வடக்குமாதவி சாலையில் கண்ணன் சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டு வந்துள்ளார். உழவர் சந்தை அருகே வந்த போது, லிப்ட் கேட்டு வந்தவர் இறங்கிக்கொள்வதாக கூறியதையடுத்து, தனது இருசக்கர வாகனத்தை கண்ணன் நிறுத்தியுள்ளார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

மேலும் லிஃப்ட் கேட்டு வந்த வாலிபரும், அவர்களுடன் சேர்ந்துகொண்டு, கண்ணனை தாக்கியுள்ளதால், ஏற்கெனவே திட்டமிட்டு இந்த கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கடன் பிரச்சினைக்கு தீர்வு இதுவல்ல - நால்வர் தற்கொலை உணர்த்தும் பாடம்

இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் கூட்டம் கூடியதையடுத்து, கண்ணனை அப்படியே விட்டுவிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த கொலைவெறித் தாக்குதலில் தலையின் பின்பகுதி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட கண்ணன், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நகர காவல் துறையினர், எதற்காக கண்ணன் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.