ஹைதராபாத் (தெலங்கானா): பயிற்சி ஐஏஎஸ் அலுவலர் மீது காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டன்லால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவரது மகன் முருகேந்தர் லால் மதுரையில் பயிற்சி ஐஏஎஸ் ஆக உள்ளார். இவர் மீது தான் பெண் அளித்த புகாரின் பேரில், செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பாலியல் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கும் பதியப்பட்டது. ஆனால், இத்தனை நாட்கள் கழித்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முருகேந்தர் லால், பேஸ்புக் மூலம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
பெண் அளித்த புகாரில், பயிற்சி ஐஏஎஸ் அலுவலர் தன்னை திருமண ஆசைகாட்டி, பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். பலமுறை முருகேந்தர் லால் பயிற்சி பெற்று வரும் இடத்திற்கு தன்னை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் தான் அதற்கு இசையவில்லை என்றும், அப்போது தன்னை அவர் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததாகவும் பெண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலமுறை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, பயிற்சி ஐஏஎஸ் அலுவலர் போக்குகாட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவரின் தந்தையும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மண்டன்லால், தன் மகனை விட்டுசெல்லும்படி, அந்த பெண்ணிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசியுள்ளார். காவல் துறையினர் சம்பந்தபட்ட ஆவணங்களை கொண்டு பயிற்சி ஐஏஎஸ் அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலியின் கணவன் தலையை வெட்டி வீசிய இளைஞர் - ஒருதலைக் காதலால் கொடூரம்