ETV Bharat / crime

திமுக வட்டசெயலாளர் கொலை வழக்கு: 7 பேர் கைது - சென்னை மாவட்டம் மடிப்பாக்கம்

சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட கழகச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் இதுவரை ஏழு பேரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

seven arrested in Madipakkam Selvam murder case
திமுக வட்டசெயளாலர் செல்வம் கொலை வழக்கு
author img

By

Published : Feb 4, 2022, 8:04 AM IST

சென்னை: மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (38). இவர் திமுக வட்டச் செயலாளர். இவரை கடந்த 1ஆம் தேதி இரவு அவரது அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய ராஜாஜி நகர் பிரதான சாலையில் ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு மூன்று இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது.

இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று (பிப்ரவரி 3) அதிகாலை காரில் தப்பிச் சென்ற இருவரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அவரது ஓட்டுநர் தனசீலன் எனத் தெரியவந்துள்ளது.

அதேபோல் நேற்று (பிப்ரவரி 4) விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வட சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் விக்னேஷ், கிஷோர்குமார், நவீன், சஞ்சய், புவனேஸ்வர் உள்ளிட்டோரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதுவரை திமுக வட்டச் செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். தற்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக வட்டச் செயலாளர் கொலை: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.