திருவண்ணாமலை: செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனை பின்புறம் உள்ள வயல்வெளியில் அடையாளம் தெரியாத பெண்ணின் எலும்புக்கூடு கிடப்பதாக அப்பகுதிக்கு மாடு ஓட்டிச் சென்றவர் செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற செங்கம் போலீசார் பெண்ணின் எலும்பு கூடை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கம் அரசு பொது மருத்துவமனை பின்புறம் அடையாளம் தெரியாத பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ள சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது