ஈரோடு: மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் எல்லைப்பகுதிக்கு மிக அருகில் உள்ள நிலையில், அங்கிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர், டி.என்.பாளையம், கே.என்.பாளையம் பகுதிகளில் அதிகம் விற்பனைசெய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுபாட்டில்கள் கடத்திவருவதைத் தடுக்க கர்நாடகா-தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் வாகன சோதனைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி.ஜி.புதூர் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் பங்களாபுதூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
440 மதுபாட்டில்கள் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
அப்போது, இருசக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து விற்பனைக்கு கடத்திவரப்பட்ட 440 மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரசாமி, பச்சையப்பன், டி.என். பாளையம் பகுதியைச் சார்ந்த சம்பத்குமார், கடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், செந்தில்குமார் ஆகிய ஐந்து நபர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.