சிவகங்கை: மானாமதுரை பகுதி நியாயவிலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி, பருப்பு பாலிஷ் செய்து வெளி மாவட்டங்களுக்கு தொடர்ந்து கடத்தப்படுவதாக மானாமதுரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வேதியரேந்தல் கிராமத்தில், நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான தனியார் அரிசி ஆலையில் அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அங்கு 200 மூட்டை ரேஷன் அரிசி, 10 மூட்டை பருப்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், பச்சேரி காலனியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம்