ETV Bharat / crime

ஆட்டோவில் ஏறியபின் காணாமல்போன பள்ளி மாணவி - சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் காவல் துறையினர் - காணாமல் போன பள்ளி மாணவி

சேலம்: சேலம் அருகே காணாமல்போன பள்ளி மாணவியை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

cctv visual of school girl missing
ஆட்டோவில் ஏறிய பின் மாயமான பள்ளி மாணவி
author img

By

Published : Feb 12, 2021, 8:59 AM IST

சேலம் அருகே சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள எமரால்டு வேலி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

பிப். 10 அன்று காலை பள்ளி சென்ற அந்த மாணவி நேற்று (பிப். 11) வரை வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே பள்ளி மாணவி காணாமல்போன தகவல் சமூக வலைதளங்களில் மாணவியின் ஃபோட்டோவுடன் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், காணாமல்போன பள்ளி மாணவி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் நடந்து செல்லும்போது, திடீரென அங்கு வந்து நிற்கும் ஆட்டோ ஒன்றில் ஏறிச் செல்கின்ற காட்சியும் பதிவாகி உள்ளது.

ஆட்டோவில் ஏறிச் செல்லும் மாணவி

இந்தக் காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென வரும் ஆட்டோவில் மாணவி எந்தவித தயக்கமுமின்றி ஏறுவதால் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் உள்ளே இருந்தார்களா? ஆட்டோ யாருடையது? ஆட்டோவை ஓட்டி வந்தது யார் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மெரினா கடற்கரையில் மூழ்கிய மாணவர்கள்: ஒருவர் இறந்தநிலையில் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.