ETV Bharat / crime

வெளிநாட்டவர் போல் பெட்ரோல் பங்கில் கொள்ளை! - crime latest news

பெட்ரோல் பங்க் மேலாளரின் கவனத்தை திசை திருப்பி 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்கில் கொள்ளை
பெட்ரோல் பங்கில் கொள்ளை
author img

By

Published : Jun 29, 2021, 9:58 PM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்துள்ள பவுஞ்சூர் பகுதியில் சசிகலா என்பவருக்கு சொந்தமாக ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில், ஜெயகிருஷ்ணன் என்பவர் மேலாளராக பணியில் உள்ளார். நேற்று(ஜூன்.28) இந்த பங்கிற்கு, வெளிநாட்டினரைப் போன்ற தோற்றம் கொண்ட இருவர் வந்ததாகக் கூறப்படுகிறது‌.

அப்போது, அவர்கள் ஜெயகிருஷ்ணனை அணுகி, தாங்கள் இதுவரை, இந்திய ரூபாய் நோட்டுகளை, குறிப்பாக 500, 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்ததில்லை என்றும், அவற்றைக் காண வேண்டும் என்றும் கேட்டதாகக் கூறுகின்றனர். அதனை நம்பிய பெட்ரோல் பங்க் மேலாளர், அவர்களை பொறுப்பாக அழைத்துச்சென்று, கட்டுக்கட்டாக 500, 2,000 ரூபாய் நோட்டுகளைக் காட்டியுள்ளார்.

பெட்ரோல் பங்கில் கொள்ளை

அப்போது, அவரது கவனத்தை சாமர்த்தியமாக திசை திருப்பிய அவர்கள், 83 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

தாமதமாக இதை தெரிந்துகொண்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம், அணைக்கட்டு காவல்துறையில், இதுகுறித்து பதறியடித்துக்கொண்டு புகார் செய்தனர். பணத்தைக் கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி ரூபாய் நோட்டுகளால் முதியவரை ஏமாற்றிய கொள்ளை கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.